பழமையான மாகாளியம்மன் கோவில் திருவிழா
ADDED :1306 days ago
அன்னூர்: கஞ்சப்பள்ளி, குமர கவுண்டன் புதூரில், பழமையான மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நேற்று நடந்தது.
கஞ்சப்பள்ளி ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமையான குமரகவுண்டன் புதூர், மாரியம்மன் கோவிலில் 15 நாள் பூச்சாட்டு திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது. 12ம் தேதி மினி முடுக்குதல் நடந்தது. தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், கம்பம் சுற்றி ஆடுதலும் நடந்தது. 19ம் தேதி இரவு அணிக்கூடை எடுத்தல், கரகம் எடுத்தல், ஊர்சுற்றி அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாண உற்சவமும், பொங்கல் வைத்தலும், முளைப்பாரி எடுத்தலும் நடந்தது. கஞ்சப்பள்ளி, ஊத்துப் பாளையம், உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.