சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா
ADDED :1306 days ago
கோவில்பாளையம்: என்.எஸ்.கே. நகர் சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா வரும் 24ம் தேதி நடக்கிறது.
சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டில் உள்ள என்.எஸ்.கே. நகரில், ஸ்ரீ துவாரகமாயி சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவில் எட்டாம் ஆண்டு மகா உற்சவ பெருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், தீபாராதனை நடக்கிறது. காலை 11:00 மணிக்கு 108 சங்கு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு மகா ஆரத்தியுமீ நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர், பக்தர்கள் பங்கேற்று பாபா அருள் பெறலாம் என அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.