உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உய்யவந்த அம்மன் கோயிலில் மகா ருத்ராபிஷேகம்

உய்யவந்த அம்மன் கோயிலில் மகா ருத்ராபிஷேகம்

கடலாடி: கடலாடி அருகே மேலக்கிடாரத்தில் பழமைவாய்ந்த உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று மாலை 6 மணி முதல் அஸ்திர ஹோமம் பூஜை நடந்தது. மூலவர் உய்யவந்த அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடக்கிறது.ஹோம பூஜைக்கு பின்பு மகா ருத்ராபிஷேகம் தொடங்கி பகல் 12 மணி வரை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை உய்யவந்த அம்மன் கோயில் குலதெய்வ வழிபாட்டு குழுவினர் மற்றும் மேலக்கிடாரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !