புத்து மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
ADDED :1302 days ago
சேலம் : ஆத்துார் அருகே, மஞ்சினி கிராமத்தில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவின் கடைசி நாளான நேற்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மூலவர் புத்துமாரியம்மன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.