கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் நாளை ஆடி சுவாதி சிறப்பு பூஜை
ADDED :4852 days ago
திருநெல்வேலி : ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கீழப்பாவூர் நரசிங்க பெருமாள் கோயிலில் நாளை (26ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கீழப்பாவூர் நரசிங்க பெருமாள் கோயிலில் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கடந்த ஜூன் 1ம் தேதி பல லட்ச ரூபாய் செலவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நாளை மாலை 4 மணிக்கு விஷேச அபிஷேக ஆராதனை நடக்கிறது.