தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை
ADDED :1458 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. பக்தர்கள் விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து மிளகு, தேங்காய், எள் தீபம் இட்டு வழங்கினர். வடைமாலை அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.