உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா

திரவுபதியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா

சென்னை, புதுப்பிக்கப்பட்ட காரப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவில், மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து, தீமிதி என, 25 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஓ.எம்.ஆர்., சாலை, காரப்பாக்கம் பகுதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக, அங்குள்ள கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன.சிறப்பு பூஜைபோதிய பராமரிப்பு இல்லாமல், பெரிய அளவில் விழாக்கள் எடுக்கவில்லை. ஆனால், தினமும் பூஜை நடைபெறும். காரப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், இந்த கோவிலுக்கு செல்கின்றனர். கடந்த, 2011ம் ஆண்டு, ஊர் மக்கள் ஒன்று கூடி, கோவில் கட்டி, போதிராஜா சிலையும், கொடி மரமும் அமைத்தனர். தினமும், திரவுபதியம்மனுக்கும், போதிராஜாவுக்கும் அபிஷேகம் செய்யப்படும்.ராகு கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, கோவிலின் வடக்கு பக்கம் நவகிரக சிலை, நாகராஜா - ராணி சிலைகள் உள்ளன. மாதந்தோறும், அமாவாசையின் போது சிறப்பு பூஜை நடைபெறும்.மகாபாரத சொற்பொழிவுஇந்நிலையில், கோவிலை புதுப்பித்து, முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழா நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 21ம் தேதி, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் விழாவில், மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகம், தீமிதி உலா, படுகள காட்சி, திருமுடி புனைதல், தருமர் பட்டாபிஷேகம் என தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.தீமிதிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். கோவில் அறங்காவலர் லியோ என்.சுந்தரம் தலைமையிலான ஊர் பொதுமக்கள், 25 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !