கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திகடன்
ADDED :1294 days ago
கோவை; கோவையின் காக்கும் தெய்வமான தண்டுமாரியம்மன் கோவில் அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீசட்டி மற்றும் சக்திகரகம் ஏந்தி அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து பூச்சாட்டு, அக்னிசாட்டு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று தீச்சட்டி மற்றும் சக்தி கரகம் எடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.