கூரம் கிராமத்தில் கூழ்வார்த்தல் விழா
ADDED :1296 days ago
காஞ்சிபுரம்: கூரம் கிராமத்தில் உள்ள கொள்ளாபுரியம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், பழமையான கொள்ளாபுரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா நடக்கும்.அதன்படி, கூழ்வார்த்தல் நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது.மதியம் 2:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.