செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1295 days ago
காங்கேயம், முதலிபாளையம் கிராமம், நத்தக்காட்டுப்புதுாரில் செல்லாண்டியம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. கடந்த, 24ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை நடந்தது. அதை தொடர்ந்து யாக சாலை அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 6:40 மணிக்கு, சிவகாம வித்தியாநிதி சிவஸ்ரீ சிவசுந்தர சந்தோஷ் சிவம் முன்னிலையில், செல்லாண்டியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷகம் நடந்தது. இதை தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்காரம், தச தரிசனம், காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடந்தது.