தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
ADDED :1280 days ago
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 1 இரவு வடிசோறு நிகழ்ச்சியும், அதிகாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2ல் அம்மன் சப்பரத்தில் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், 3ல் கிடா வெட்டு பூஜை, மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 4-ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.