உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ பூஜை : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷ பூஜை : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

போடி: போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் வியாழன் பிரதோஷத்தை முன்னிட்டு தட்சணாமூர்த்தி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.

* பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !