உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவராக பெருமாள் கோவிலில் வராகர் ஜெயந்தி உற்சவம்

ஆதிவராக பெருமாள் கோவிலில் வராகர் ஜெயந்தி உற்சவம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஆதிவராக பெருமாள் கோவிலில், வராகர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. ஆதிவராக பெருமாள், சித்திரை உத்திரட்டாதி நாளில் அவதரித்தார். இந்நாளான நேற்று முன்தினம், மாமல்லபுரம், தொல்லியல் வளாக பகுதி, ஆதிவராக பெருமாள் கோவிலில், சுவாமி உற்சவம் கண்டார். உற்சவர் ஞானபிரான், தேவியர், சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, வீதியுலா சென்றார்.திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோவிலில், உற்சவ பெருமாள் தேவியருக்கு, சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலை, சுவாமி, வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !