உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுமம் கோட்டை மாரியம்மன் திருவிழா

கொழுமம் கோட்டை மாரியம்மன் திருவிழா

உடுமலை: பிரசித்தி பெற்ற கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, கோவிலில் திருக்கம்பத்துக்கு, தீர்த்தம் செலுத்தி, சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில், குதிரையாறு, அமராவதி ஆறு, இணையும் பகுதியில், பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.முன்பு, சக்கரகிரி கோட்டையாக இருந்த அப்பகுதியில், நிர்மாணிக்கப்பட்ட கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, சுற்றுப்பகுதியைச்சேர்ந்த 15க்கும் அதிகமான கிராம மக்களால், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு, சித்திரை திருவிழாவுக்கு, திருக்கம்பம், 26ம் தேதி நடப்பட்டது. அமராவதி ஆற்றில், பந்தல் அமைத்து, திருக்கம்பத்துக்கு அபிேஷக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர், இரவு 11:00 மணிக்கு திருக்கம்பம் கோவிலில், நடப்பட்டது.இதையடுத்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து திருக்கம்பத்துக்கு செலுத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.திருவிழாவையொட்டி, கோவிலில், நாள்தோறும், 5 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.பக்தர்களுக்கு உச்சி கால பூஜைக்கு பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், மே 10ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு திருமண சீர் எடுத்து வருதல், 8:30 மணிக்கு, மகா அபிேஷகம், இரவு 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.மே 11ம் தேதி அம்மன் திருவீதி உலா கோவிலில் நடைபெறுகிறது. பின்னர், மே 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை, ஒவ்வொரு கிராம மண்டகப்படியில், அம்மன் எழுந்தருளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !