திருமலையில் மூன்று நாட்கள் பவித்ர உற்சவம்!
ADDED :4853 days ago
நகரி: திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், நாளை முதல் வரும் 31ம் தேதி வரை, பவித்ர உற்சவம் நடைபெறுகிறது.சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் மூலம் ஏற்படும் தோஷங்களால், கோவிலின் பவித்ர தன்மை பாதிக்கப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் ஐதீகமுறைப்படி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (28ம்தேதி) திருமலை கோவிலில் ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, அர்ச்சகர்கள் பவித்ர பிரதிஷ்டை செய்கின்றனர். அதன்பின் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படும்.பவித்ர உற்சவம் நடைபெறும் 29, 30 மற்றும் 31ம் தேதிகளில், கோவில் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.