உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125 வது ஆண்டு விழா

விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125 வது ஆண்டு விழா

தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டை முன்னிட்டு கும்பகோணத்தில் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஒரு கட்டுரை போட்டியை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடமும் சாரண சாரணியர் இயக்கமும் இணைந்து நடத்தின.  இதில் 44 பள்ளிகளில் இருந்து 1225 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவியர்களுக்கு கும்பகோணம் நகர மே. நி. பள்ளியில் கல்வி மாவட்ட அலுவலர் திரு சண்முகநாதன் அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் திரு வேலப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், சுவாமி விவேகானந்தரின் ஷீல்டுகள், புத்தகங்கள்,  புகைப்படங்கள் முதலியன வழங்கப்பட்டன. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !