உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் இசைப் பயிற்சி முகாம்

திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் இசைப் பயிற்சி முகாம்

மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவாரத் திருமுறை கலைப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு கோடை விடுமுறை நாட்களில் நாளை மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 6.00 மணி முதல் 7.45 வரை தேவாரத் திருமுறை இசை பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை. பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இடம் : திருவாடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு. மதுரை – 625001

மேலும் தகவலுக்கு முனைவர் சுரேஷ் சிவன் செல் : 94439 30540 தொடர்பு கொண்டு அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !