சங்கராபுரத்தில் வாசவி அம்மன் வீதியுலா
ADDED :1287 days ago
சங்கராபுரம், சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தியையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது.அதனையொட்டி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்குநேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்யவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.