விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1500 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்திரை வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்திரை வெள்ளியை முன்னிட்டு, நேற்று (13ம் தேதி) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.