/
கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் கோயிலில் தங்க விமானத் திருப்பணி: துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்தார்
திருக்கோஷ்டியூர் கோயிலில் தங்க விமானத் திருப்பணி: துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ADDED :1297 days ago
சிவகங்கை : சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி கடந்த 12 ஆண்டுகளாக நடக்கிறது. இன்று காலை 11.00 மணிக்கு கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலினை ராணி மதுராந்தக நாச்சியார் வரவேற்றார். தங்கத்தகடு பதிக்கும் பணியை தங்க ரேக்கை லட்சுமிநாராயணன் செப்பு சிற்பத்தில் துர்கா ஸ்டாலின் பொருத்தி துவக்கி வைத்தார். அவரது சகோதரி, அமைச்சர் பெரிய கருப்பன் குடும்பத்தினர், திருக்கோஷ்டியூர் மாதவன், கலக்டர் மதுசூதன் ரெட்டி, ஆண்டாள் பேரவை, கொடையாளர்கள், திருப்பணி குழுவினர் பங்கேற்றனர்.