பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி
பழநி: பழநி மலைக்கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோவில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்கு ரத வீதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருஞான சம்பந்தருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பொன் கிரீடம் சூடி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை நடைபெற்றது. ஓதுவார்கள் தேவாரப் பாடல்களைப் பாடி வழிபட்டனர். சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் கோயில் வலம் வந்தனர். அதன்பின் அமிர்த லிங்கம் குருக்கள், செல்வசுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் பொற் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அன் சன்ஸ் தனசேகரன், ராகவன், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில்குமார், சதீஸ்குமார், விஜயகுமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.