உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஞானசம்பந்தர் குருபூஜை நால்வருக்கு சிறப்பு அபிஷேகம்

திருஞானசம்பந்தர் குருபூஜை நால்வருக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பூர் : திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நால்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நேற்று நடந்தது.

வைகாசி மூலநட்சத்திரநாளில் முக்தியடைந்த திருஞானசம்பந்தர், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருகநாயனார் ஆகிய, நான்கு நாயன்மார்களுக்கும் குருபூஜை நடந்தது.தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் உள்ள, திருஞானசம்பந்தர் உட்பட நால்வருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தர், பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சிவனடியார்களும், பொதுமக்களும், தேவார பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !