மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1224 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1224 days ago
சாத்துார்: சாத்துார் சுப்ரமணிய சாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஸ்ரீமத் பாகவதம் பக்தி சொற்பொழிவு நடந்து வருகிறது.நேற்று முன் தினம் அம்பரீஷ சரித்திரம் பக்தி சொற்பொழி ஸ்ரீ ராமஸ்வாமிஜி பேசினார். அவர் பேசிய போது கூறியதாவது: அம்பரீஷ சக்கவர்த்தி பகவான் கிருஷ்ணன் மீது பக்தி கொண்டு தன் மனைவியுடன் துவாதச திதி நட்சத்திரம் நாளில் தவறாமல் விரதம் இருந்து வந்தார். அவரது விரதத்தை கெடுக்க நினைததார். துவாதச திதி அன்று அரண்மனைக்கு சென்றவர் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றவர் . விரதம் முடிக்கும் நேரம் கழித்து வேண்டும் என் வந்தார். அம்பரீஷன் தீர்த்தம் சாப்பிட்டு விரதம் முடித்திருந்தார். தான் வருவதற்கு முன்பு விரதம் முடித்ததை கண்டுஆத்திரமடைந்த துர்வாசர் தன் தலைமுடியை பிய்த்து பூத கனமாக்கி.அம்பரிஷன் மீது ஏவினார். ஆனால் அம்பரிஷனை காத்து வந்த ஸ்ரீசக்கரத் தாழ்வார், பூதத்தை கொன்று துர்வாச முனிவரை கொல்ல விரட்டியது. பிரம்மா, சிவன், கைவிட்ட நிலையில் விஷ்ணுவிடம் சரணடைந்தார். விஷ்ணுவோ தான் பக்தர்களுக்கு அடிமை எனவே நீங்கள் அம்பரீஷனிடம் சென்று சரண் அடையுமாறு கூறினார். துர்வாசர் அம்பரீஷனிடம் சரணடைந்தார். அம்பரீசன் வேண்டுகோளை ஏற்று சக்ரத்தாழ்வார் துர்வாசரை விட்டு விட்டு இருப்பிடம் சென்றார். இதன் மூலம் பகவான் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அடிமையாக காவலாக இருந்து காத்தருள்வார் என்பது புலப்படுகிறது . என்றார். கதையை கேட்க ஏராளமான பக்தர்கள் வந்த திருந்தனர். சாத்துார் நாமத் வார் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
1224 days ago
1224 days ago