உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியகோடி விமானத்தில் அருள்பாலித்த தாமோதர பெருமாள்

புண்ணியகோடி விமானத்தில் அருள்பாலித்த தாமோதர பெருமாள்

வில்லிவாக்கம் : தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பெருவிழா நிறைவு நாளில், புண்ணியகோடி விமானத்தில் உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, பழமைவாய்ந்த வில்லிவாக்கம், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், கடந்த 16ம் தேதி துவங்கி பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.விழாவையொட்டி, தொடர்ந்து 10 நாட்களும், தினசரி காலை, மாலையில் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு திருவிழா நிறைவு நாளில், பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு சுவாமி கோவிலை சென்றடைந்ததும் கொடி இறக்கப்பட்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !