ஷீரடி சாய்பாபா கோவில்களில் மூலவருக்கு பாலாபிஷேகம்
ADDED :1532 days ago
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், மூலவருக்கு, பாலாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், உற்சவர், கோவில் வளாகத்தின் உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், நகரி அருகே உள்ள சாய்பாபா கோவில்களிலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.