உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி அய்யனார் கோயில் திருவிழாவில் மாட்டுவண்டி பந்தயம்

கமுதி அய்யனார் கோயில் திருவிழாவில் மாட்டுவண்டி பந்தயம்

கமுதி: கமுதி அருகே பொட்டப்புளி கிராமத்தில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கிராமமக்கள் அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் பெரிய,சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடந்தது.இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 மாட்டு வண்டிகள்,வீரர்கள் கலந்து கொண்டனர்.இரண்டு பிரிவு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு, குத்துவிளக்கு கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது.கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !