உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

கோத்தகிரி: கோத்தகிரி தேனாடு கீழட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று முந்தினம் மாலை, 5:00மணிக்கு, கங்கா பூஜை, கணபதி பூஜை யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல், இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் திரவிய அபிஷேகம் பூஜையை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மைசூரு குண்டல்பெட் ஸ்ரீ புரா சுவா துண்டதாரிய சுவாமிகள் மற்றும் இட்டகல் மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிகள் மைசூரு ஸ்ரீதர் சாஸ்திரி ஆகியோர், கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து மகா தீபாராதனை, புஷ்ப அலங்காரம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், தேனாடு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !