உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது.


தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, சிறப்பு பூஜைகளுடன், வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சிவாச்சார்யார்கள், வேத பாராயணம் செய்து, கொடி மர பூஜைகள் செய்து, கொடியை எடுத்து வந்தனர். மங்கல வாத்திய இசையுடன் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், கொடிமரம், பலிபீடத்துக்கு பட்டாச்சார்யார்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கொடிக்கு பூஜைகள் செய்து எடுத்துவந்து, கொடியேற்றினர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, உற்வசமூர்த்திகள் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று இரவு, சங்கீத கலாபீடம் மாணவ, மாணவியரின் நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !