உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிலுக்கு ஒரே நாளில் பத்து கோடி நன்கொடை : நெல்லை பக்தர்கள் வழங்கினர்

திருப்பதி கோவிலுக்கு ஒரே நாளில் பத்து கோடி நன்கொடை : நெல்லை பக்தர்கள் வழங்கினர்

திருமலை: திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாளுக்கு பக்தர்கள் பணமாகவும், தங்கள், வைரம், வைடூரியம் என்று பொருளாகவும் பெருமளவில் நன்கொடை அளித்து வருகின்றனர். நேற்று நெல்லையைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற பக்தர் திருமலை திருப்பதி கோவிலுக்கும் அது சார்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகளுக்கும் சேர்த்து ஏழு  கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதே போல நெல்லையைச சார்ந்த மூன்று தனியார் நிறுவனங்கள் தலா ஒரு கோடி வழங்கின ஆக நேற்று மட்டும் நெல்லையைச் சேர்ந்த பக்தர்கள் பத்து கோடி ரூபாய் பெருமாளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !