செட்டிப்பட்டு கோவிலில் 10ம் தேதி செடல் உற்சவம்
ADDED :1533 days ago
திருக்கனுார் : செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பகாசூரன் அன்னம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று பகாசூரன் அன்னம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும் 10ம் தேதி சாகை வார்த்தல், செடல் உற்சவம், 12ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.