ரெங்கராஜபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1257 days ago
பட்டிவீரன்பட்டி: ரெங்கராஜபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் யாகசாலை பூஜைகள் கணேச ஹோமத்துடன் துவங்கியது. வாஸ்து சாந்தி, முளைப்பாரி தீர்த்தம் அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் நவக்கிரக, கோ, வருண பூஜைகள் நடந்தன. நேற்று வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களான பாலவிநாயகர் முருகன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருடன் வட்டமடிக்க பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.