அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக வசந்த உற்சவம்
ADDED :1215 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று வைகாசி விசாகம் வசந்த உற்சவம் நடைபெற்றது.
தமிழ் கடவுளான முருகன் பிறந்த விசாக நட்சத்திரமான, வைகாசி மாதத்தில் வரும் நாளன்று, வசந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. முருக பெருமான் வீற்றிருக்கும் கோவிலில், குழந்தை வடிவமாகவும், சிவன் கோவிலில், வசந்த விழாவெனவும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சோமாஸ்கந்தர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று, திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.