உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரையாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கரையாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சூலூர்: கரையாம்பாளையம் கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சூலூர் அடுத்த கரையாம்பாளையம் ஸ்ரீ கருவலூர் மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, விமானத்துக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, இன்று காலை புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு விமானத்துக்கும், 7:30 மணிக்கு, ஸ்ரீ கருவலூர் மாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், மகா தீபாராதனை பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு பரவசமடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !