உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் பாலாலய விழா

பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் பாலாலய விழா

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தொடக்க பாலாலய விழா நடந்தது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோவில். இக்கோயிலில் கடந்த 2007ஆம் ஆண்டு 15 வருடங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து அதற்கான பாலாலய விழா நடந்தது. இதனையொட்டி நேற்று சிறப்பு பாலாலய யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மல்லிகை ,முல்லை செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபா தாரணை நடந்தது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன்,நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !