கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா
களியக்காவிளை: மார்த்தாண்டம் , கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன், அனந்தகிருஷ்ணன் , மஹாதேவர் கோயில் திருவிழா நாளை (24ம்தேதி) துவங்கி ஜூன் 30ம் தேதி நிறை வடைகிறது. மார்த்தாண்டம் சந்திப்பு அருகே கோதேல்வரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் இவ்வருட திருவிழாவின் முதல் நாள் சந்தனக்குடம் நிறைத்தல், சக்திபுரம் பத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து மார்த்தாண்டம் வழியாக கோதேஸ்வரம் கோயில் வந்தடையும். தொடர்ந்து கீதாபாராயணம், அம்மனுக்கு அபிஷேகம், மாலை ஆயிரத்து எட்டு சுமங்கலிபூஜை , மடி பிச்சை வழங்குதல், ஏகாதசி பூஜை நடக்கிறது.
இரண்டாம் நாள் விழாவில் காலை நவக்கிரக பூஜை , மாலை சக்தி பூஜை , சமய வகுப்பு மாணவிகளின் மகளிர் மாநாடு நடக்கிறது. மூன்றாம் நாள் விழாவில் சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள் நடக்கிறது. மாலை ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நான்காம் நாள் விழாவில் திருவாசகம் பாராயணம் முற்றோதல், மாலை சுதர்சன காயத்ரி ஹோமம் நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவில் தேவி மகாத்மிய பாராயணம், மாலை ராகு கால துர்க்கா பூஜை , நடக்கிறது. ஆறாம் நாள் விழாவில் காலை சிறப்பு தீபாராதனை, பிம்ப சுத்திகிரியைகள் கலசபூஜை , திருமந்திர இசை சொற் பொழிவு மாலை அலங்கார தீபாராதனை, நடக்கிறது. ஏழாம் நாள் விழாவில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், திருமுறை பாராயணம், ஞான சாந்தி, மதியம் சுவாமி வீதிவலம் வருதல், அலங்கார தீபாராதனை, மாலை குடும்ப ஐஸ்வர்ய பூஜை, ஹரி நாம சங்கீர்த்தனம், பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோதேஸ்வரம் திருவிழாக்குழுவினர், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.