விஜயகாந்த் நலம் பெற வேண்டி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1266 days ago
திசையன்விளை: திசையன்விளையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி, திசையன்விளை சண்முகநாத சாய்பாபா கோயிலில், நகர தேமுதிகசார்பில், நகரசெயலாளரும், டவுன் பஞ்., கவுன்சிலருமான நடேஷ் அரவிந்த் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மகேஸ்வரன், நகர பொருளாளர் எமர்சன் ஞானம் மற்றும் நகர நிர்வாகிகள் அஜிஸ், கார்த்திக், மணிகண்டன், சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.