ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ADDED :1565 days ago
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.