/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுத்த நெல்லூர் நவயுக நிறுவன தலைவர் தரிசனம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுத்த நெல்லூர் நவயுக நிறுவன தலைவர் தரிசனம்
ADDED :1454 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுத்த நெல்லூர் நவயுக நிறுவன தலைவர்( தனியார் நிறுவன தலைவர்) விஸ்வேஸ்வர ராய் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசுலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.