உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் மீண்டும் சர்க்கரை பால் விநியோகம்

குன்றத்து கோயிலில் மீண்டும் சர்க்கரை பால் விநியோகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த பால் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் துவங்கியது. பக்தர்கள் கொண்டு வரும் பால் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக பாலுடன் நாட்டு சக்கரை கலந்து செவ்வாய்க்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் 2010ல் துவக்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அத்திட்டம் இன்று முதல் மீண்டும் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !