ஆண்டிபட்டி கோயில்களில் அமாவாசை விழா
ADDED :1205 days ago
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் அமாவாசை விழா நடந்தது. விழாவில் வேலப்பர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில் ஆஞ்சநேயருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட 21வகையான அபிஷேகம் செய்து, மலர் அலங்காரம், வடை மாலை சாத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.