உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல், திருப்பணி உண்டியல் உட்பட 10 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அதில், 19 லட்சத்து 43 ஆயிரத்து 937 ரொக்கம், 20 கிராம் தங்கம், 240 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. இதற்காக, கடலுாரில் இருந்து வந்திருந்த அறநிலையத்துறை உதவி ஆணையரின் அரசு ஜீப், கோவிலுக்குள் உள்ள செயல் அலுவலர் அறைக்கு வெளியே மர நிழலில் நிறுத்தப்பட்டிருந்தது.இது, சிவனடியார்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெளி பிரகாரத்தில் கற்கள் பதிக்கும் பணி முழுமை பெறாததால், வாகனம் உள்ளே வந்து விட்டது; இனி வராது என அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !