ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1239 days ago
ஏரல்: ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆயிரத்தெண் விநாயகர், காளஹஸ்தீஸ்வரர், கல்யாணசுந்தரி அம்பாள் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் மற்றும் கஜபூஜையுடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.