மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூஜை விழா
ADDED :1187 days ago
அவிநாசி: மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து, ஆனி மாத மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும்,கரூர், குமார சாமிநாத தேசிகர் தலைமையில், தமிழகத்தின் தலை சிறந்த ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்ட , திருவாசகம் முழுமையாக தேவாரப் பண்ணிசை முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து,நான்கு ரத வீதிகளிலும் சாமி வலம் வந்தது இதில்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.