மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1186 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1186 days ago
பழநி: பழநி முருகன் கோயில் உபகோயில்களான ஏழு கோவில்களில் இன்றும் , நாளையும் விமான பாலாலயம் நடைபெற உள்ளது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான பழநி நகரில் உள்ள வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில் ஆகிய ஏழு கோயில்களுக்கு விமான பாலாலய நிகழ்ச்சி இன்று மாலை 5:00 மணிக்கு முதல் கால வேள்வியும், நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு, திருக்குடம் நிறுவுதல், முதற்கால வேள்வி, திருவமுது வழங்குதல், இரண்டாம் கால வேள்வி, பசு வழிபாடு, நவகொள் வழிபாடு, ஸ்தபதி மரியாதை, திருப்பணி துவக்கம் ஆகியவை நடைபெறும். என இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
1186 days ago
1186 days ago