தேனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1526 days ago
பாலமேடு: பாலமேடு அருகே 66.கீழ மேட்டுப்பட்டியில் தேனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 3ல் சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக வேள்வியை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.