அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் ஒப்படைப்பு
ADDED :1193 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு, சண்டிகேஸ்வரர் தேர் ஒப்படைப்பு. அவிநாசி பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பாக சண்டிகேஸ்வரருக்கு, ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரப்படி அழகிய வேலைப்பாடுகளுடன், லிங்கேஸ்வரர் கோவிலின் தல புராணங்களை கூறும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு புதிய தேர் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெள்ளோட்டம்,நான்கு ரத வீதிகளிலும் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருத்தேர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.