உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் மஹா சண்டி ஹோம விழா

ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் மஹா சண்டி ஹோம விழா

திருப்பூர்; திருப்பூர், திருநீலகண்டபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், 3ம் ஆண்டு விழா மற்றும் மஹா சண்டிேஹாம விழா நேற்று நடந்தது.நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கணபதிவேள்வி, நவக்கோள் வேள்வி மற்றும் நிறைவேள்வி பூஜைகள் நடந்தன.மாலை, மண்டபபூஜை, கலச ஸ்தாபனம், மந்திர பாராயணம், மூலமந்திர வேள்வி பூஜைகள் நடந்தன.நேற்று, சண்டி பாராயணம், சண்டி ேஹாமம், சுமங்கலி - கன்யா பூஜை, பூர்ணாகுதி, கலச அபிேஷகம், அலங்கார பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது.அவிநாசி, வாசீகர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !