உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் மகோற்சவ திருவிழா

சக்கரத்தாழ்வார் மகோற்சவ திருவிழா

அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் மகோத்சவ திருவிழா நாளை நடக்கிறது.

அன்னூர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இங்கு சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர மகோத்சவ திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது. மாலை 4:15 மணிக்கு விஸ்வக்சேன ஆராதனையும், இதையடுத்து மகா சுதர்சன ஹோமமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும், சுவாமி உட்பிரகார உலா வருதலும், சற்று முறையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமானுஜர் பக்தஜன பேரவையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !