பழநி கோயில்களில் பாலாலயம் நிறைவு
ADDED :1157 days ago
பழநி: பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு பாலாலயம் நடைபெற்றதுபழநி முருகன் கோயிலின் உப கோயில்களான வேணுகோபால பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில், பாதிரிவிநாயகர் கோயில், கிரி வீதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இடும்பன் மலைக்கோயில், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், சண்முக நதி துர்நாச்சி அம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் ஆகிய கோயில்களுக்கு விமான பாலாலயம் அதிகாலை 5:00 மணி முதல் நடைபெற்றது. இதில் அனுமதி பெறுதல், விநாயகர் வழிபாடு,தல புனிதமாக்கல்,நவகோள் வழிபாடு, வேள்வி சாலை வழிபாடு, யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணைஆணையர் நடராஜன் கலந்து கொண்டார்.