உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேகம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேக வைப்பவன் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகள் புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை ஜேஷ்டாபிஷேக வைபவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்திய பூஜை, 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினர். பகல் 10:00 மணிக்கு பட்டாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க, மகா சாந்தி ஹோமம், 12:30 மணிக்கு பூர்ணாகுதி, புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள், மனவாள மாமுனிகளுக்கு விசேஷ அலங்காரத்தில், திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை, சேவை சாற்றுமரை நடந்தது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீசபெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜெண்ட் கோலாகளன் ஏற்பாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !